BB ஜோடிகள் நிகழ்ச்சியில் தவறு செய்த ரமேஷ், எச்சரித்த ரம்யா கிருஷ்ணன்!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிக்கும் பெரியளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள்.
இதில் பிரபல பிக்பாஸ் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் நடன திறமையை காண்பித்து போட்டிபோட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் நடனமாடி கொண்டிருந்த ரமேஷ் திடீரென தடுமாறியது மட்டுமின்றி தான் வைத்திருந்த வால் கனமாக இருப்பதாகவும் காரணம் கூறியுள்ளார்.
இதனையடுத்து ரம்யா கிருஷ்ணன் நீங்கள் போட்டியில் உள்ளீர்கள் ரமேஷ், நாங்கள் உங்களுக்கு மறுவாய்ப்பு தருகிறோம். ஆனால் இது மீண்டும் தொடர கூடாது என எச்சரித்துள்ளார்.