"நவரசா" படத்தில் இயக்குநர் பிரியதர்ஷனுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் - நடிகை ரம்யா நம்பீசன் !

Navarasa Ramya nambeesan
By Jeeva Jul 28, 2021 08:30 PM GMT
Report

திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். விரைவில் வெளியாகவிருக்கும் "நவரசா" ஆந்தாலஜி படத்தில், லக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். மனிதனின் அடிப்படை உணர்வுகளான 9 ரசங்களை மையமாக கொண்டு, தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்தும், இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது குறித்தும், நடிகை ரம்யா நம்பீசன் பகிந்துகொண்டதாவது... எனது கதாப்பாத்திரத்தில் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிப்பதாக, படைப்பாளிகள் என்னிடம் கூறியபோது, எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன். இயக்குநர் பிரியதர்ஷன் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக்கொண்டார். அவரால் தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம் என்றார்.

"நவரசா" மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படம். Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். "நவரசா" Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகிறது.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்   

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US