ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இடையே வெடித்த மோதல்! வெளியான பரபரப்பான ப்ரோமோ
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிக்கும் பெரியளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள்.
இதில் பிரபல பிக்பாஸ் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் நடன திறமையை காண்பித்து போட்டிபோட்டு வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் இதில் போட்டியாளராக இருந்த வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வனிதா "தன்னை யாருடனும் ஒப்பிட வேண்டாம்" என கூறியுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த ரம்யா கிருஷ்ணன் "போட்டியாளர்களிடையே எப்படி ஒப்பிடாமல் இருக்க முடியும்" என சொல்லியுள்ளார், பின்னர் வனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.