ராமராஜன் பட நடிகை நிஷாந்தியா இது? 54 வயதிலும் செம கிளாமராக எடுத்த போட்டோ ஷுட்... வைரலாகும் போட்டோஸ்
நடிகை நிஷாந்தி
நடிகை பானுபிரியா, தென்னிந்திய சினிமாவில் 80களில் கலக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவர்.
இவரது தங்கை என்ற அடையாளத்துடன் 1987ம் ஆண்டு Kaboye Alludu என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிஷாந்தி. பின் அதே ஆண்டில் நடிகர் ராமராஜன் நாயகனாக நடித்த எங்கு ஊரு பாட்டுக்காரன் படத்தில் நாயகியாக நடித்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே மற்றும் மதுர மரிக்கொழுந்து வாசம் போன்ற பாடல்கள் மூலம் நிஷாந்தி பட்டிதொட்டி எங்கும் கலக்கினார்.
அதன்பின் மற்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் அதிக கவனம் செலுத்தியதால் இவர் 10திற்கும் குறைவான தமிழ் படங்களிலேயே நடித்திருக்கிறார்.
லேட்டஸ்ட் போட்டோ
1992ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 2004ம் ஆண்டு நிஷாந்தியின் கணவர் திடீரென உயிரிழந்தார்.
54 வயதாகும் நிஷாந்தி இளம் நடிகைகளுக்கும் டப் கொடுக்கும் வகையில் நிறைய விதவிதமான போட்டோ ஷுட்களை நடத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
