பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் ராமாயணா திரைப்படம் செய்துள்ள வசூல்
Ramayana 11 days Box office: ரன்பீர் கபூர் நடிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் ராமாயணா. இப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது 11 நாட்களில் உலகளவில் ராமாயணா செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ராமாயணா
புராண கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றை விட ராமாயணா திரைப்படத்திற்குத்தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில், ரூ. 2,000 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவே ஆகும். இதனால், இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பல நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்து கடந்த நவம்பர் 5-ஆம் தேதி ராமாயணா திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ராமாயணா திரைப்படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 1400+ கோடி வசூல் செய்துள்ளது. ரூ. 2000 கோடியை விரைவில் தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய பில்லியனரின் 600 மில்லியன் டொலர் சொகுசு படகால் இத்தாலி அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் News Lankasri