Box Office: 20 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
Ramayana 20 days box office: நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான வெளியான ராமாயணா திரைப்படம் 20 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ராமாயணா
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்பீர் கபூர் ராமராக நடித்து கடந்த 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் ராமாயணா. இப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்க, சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்
ராமாயணா உலகளவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதுவரை 20 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்நிலையில், 20 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1780 கோடி வசூல் செய்துள்ளது.

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படம் 20 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல. இவை நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வசூல் விவரங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri