Box Office: ராமாயணா திரைப்படம் 22 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
Ramayana 22 days Box office: ராமாயணா திரைப்படம் வெளியாகி 22 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ராமாயணா
இந்திய சினிமாவை வியந்து பார்க்க வைக்கும் அளவிற்கு ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ராமாயணா. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கிய இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, வசூலில் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

22 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். மேலும், வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. இந்த நிலையில், 22 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 22 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் ரூ. 1818 கோடி வசூல் செய்துள்ளது.

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படம் 22 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் இருந்து Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன... நாடொன்றின் பக்கம் கவனத்தைத் திருப்பும் ஜேர்மனி News Lankasri
போருக்காக அழைக்கலாம்... தயாராக இருக்க 100,000 பிரித்தானிய ரிசர்வ் படையினருக்கு அறிவுறுத்தல் News Lankasri