பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
Ramayana 3 days Box office: ராமாயணா திரைப்படம் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 5-ஆம் தேதி வெளியானது. விமர்சனங்கள் நல்ல வரவேற்பை பெற, வசூலும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள ராமாயணா திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ராமாயணா
ராமாயணம் என்கிற விஷயத்தை வைத்து இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்த திரைப்படங்களுக்கெல்லாம் ரசிகர்கள் மத்தியில் கிடைக்காத மிகப்பெரிய எதிர்பார்ப்பு, ராமாயணா பாகம் 1-க்கு கிடைத்துள்ளது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் இணைந்து நடித்துள்ளனர். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இப்படத்தின் Visuals-ஐ அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

3 நாட்கள் வசூல் விவரம்
தீபாவளி பண்டிகையை திரையரங்கில் கொண்டாடும் வகையில் வெளியான ராமாயணா பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலிருந்தே பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், 3 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 360 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது; ரூ. 2000 கோடி என்கிற வசூல் இலக்கை இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எட்டி சாதனை படைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: ராமாயனா திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து இந்த பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan