பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் ராமாயணா திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 11, 2026 07:00 AM GMT
Report

Ramayana 6 days worldwide Box office: ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான ராமாயணா திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அடேங்கப்பா ராமாயணாவில் ராவணா வேடத்தில் நடிக்க யஷ் அணிந்த உடையின் எடை இத்தனை கிலோவா?

அடேங்கப்பா ராமாயணாவில் ராவணா வேடத்தில் நடிக்க யஷ் அணிந்த உடையின் எடை இத்தனை கிலோவா?

ராமாயணா

ரூ. 2000 கோடி பட்ஜெட் என்பது இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய விஷயமாகும். அத்தகைய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்றால் அதற்கேற்ப மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் இருக்க வேண்டும். அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான திரைப்படம்தான் ராமாயணா.

பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் ராமாயணா திரைப்படம் செய்துள்ள வசூல் | Ramayana 6 Days Worldwide Box Office

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் இணைந்து நடித்திருந்தனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக CG வேலைகள் எல்லாம் வேற லெவல், இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.

விமர்சனம்

பாராட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சிலர் ராமாயணா திரைப்படத்தின் மீதான தங்களது விமர்சனங்களையும் எழுப்பி வருகிறார்கள். சக்திமான் சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் முகேஷ் கண்ணா, ராமாயணா திரைப்படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவிடுகையில், "சீதை ஏன் ராவணனை எதிர்த்து போராடவில்லை' என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் ராமாயணா திரைப்படம் செய்துள்ள வசூல் | Ramayana 6 Days Worldwide Box Office

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ராமாயணா திரைப்படம் ஒவ்வொரு நாளும் உலகளவில் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்க்கிறோம். அந்த வகையில், தற்போது 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ராமாயணா இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 800 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 1000 கோடியை இன்னும் ஓரிரு நாட்களில் தொட்டுவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் ராமாயணா திரைப்படம் செய்துள்ள வசூல் | Ramayana 6 Days Worldwide Box Office

பொறுப்பு துறப்பு: ராமாயணா முதல் பாகத்தின் 6 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US