திங்கட்கிழமையில் மட்டுமே மாஸ் ரெக்கார்ட் சாதனை செய்துள்ள ரன்பீர் கபூரின் ராமாயணா...
Ramayana Box Office: நமீத் மல்கோத்ரா தயாரிப்பில் நித்திஷ் திவாரி இயக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்க படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது ராமாயணா.
ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது. இப்படம் உலகம் முழுவதும் 3டி, ஐமேக்ஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட ஃபார்மேட்களில் வெளியானது.

இந்தியா-ஓவர்சீஸ்
ஏற்கெனவே தெரிந்த கதை, எப்படிபட்ட திருப்பம் என எல்லாமே மக்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனாலும் ராமாயணா படத்தை காண்பதற்கான ஆர்வம் மக்களிடம் குறையவே இல்லை.
படம் வெளியாகி 5 நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ. 423.75 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம். அதேபோல் ஒவர்சீஸில் ராமாயணா படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

அங்கும் ரூ. 400 கோடிக்கு மேலான கலெக்ஷன் வந்துள்ளதாம்.
திங்கட்கிழமை
பொதுவாக வார நாட்களில் கம்மியான வசூலும் வார இறுதியில் மாஸ் கலெக்ஷன் படங்கள் செய்யும். ஆனால் தீபாவளி முடிந்து திங்கட்கிழமையும் பொது விடுமுறை இந்த வருடம் ஆனதால் நேற்றைய ராமாயணா பட கலெக்ஷன் அதிகமாகியுள்ளது.
அதிலும் Book My Showவில் 1 மணி நேரத்தில் 1.4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாம்.

4 வயது சிறுவனின் உடல் பாகங்களை அறுத்தெடுத்த கொடூரன்: AI செயலி மூலம் தீட்டிய சதி திட்டம் News Lankasri