பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
Ramayana movie 2 days box office: ராமாயணா திரைப்படம் இந்திய சினிமாவே மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புரிய படமான ராமாயணா முதல் நாள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில், இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ராமாயணா
ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி தீபாவளி பண்டிகை சிறப்பாக வெளியாகியுள்ள திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராக, சாய் பல்லவி சீதையாக, யஷ் ராவணனாக நடித்துள்ளனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ராமாயணா திரைப்படம் முதல் நாளே உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 221 கோடி வரை வசூல் செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவில் மட்டுமே இரண்டு நாட்களில் ரூ. 134 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 2000 கோடி
ராமாயணா திரைப்படத்தின் முதல் பாகம் இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதனை ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில், ராமாயணா முதல் பாகம் உலகளவில் ரூ. 2000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. விரைவில் இந்த சாதனையை பாக்ஸ் ஆபிஸில் ராமாயணா படைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri