ரூ. 2000 கோடி பட்ஜெட் ராமாயணா படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்... கணிக்கப்பட்ட விவரம்
ராமாயணா
இன்று தமிழ் சினிமாவில் ஒரு பிரம்மாண்ட திரைப்படம் வெளியாகியுள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி கன்னட நடிகர் யஷ் ஆகியோர் நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ராமாயணா.

இன்று (நவம்பர் 5) படம் வெளியாகிவிட்டது, படத்திற்கும் மக்கள் நல்ல விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள். ராமாயணா என்றால் என்ன கதை, அடுத்து என்ன நடக்கும், கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லாம் மக்களுக்கு தெரிந்த ஒரு கதை.
ஆனால் படக்குழு படத்தை எப்படி எடுத்துள்ளார்கள், கலைஞர்களின் நடிப்பு, தொழில்நுட்ப விஷயங்கள் தான் இப்படத்தில் முக்கியமாக பார்க்கப்படும் விஷயமாக உள்ளது.

முதல் நாள்
ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படம் முதல் நாள் முடிவில் எவ்வளவு வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் முடிவில் ராமாயணா படம் ரூ. 170 கோடிக்கு வசூலிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
