பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
Ramayana worldwide 10 days box office: ராமாயணா திரைப்படம் வெளியாகி 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. முதல் நாளிலிருந்து இப்படத்தின் வசூல் விவரங்களை நாம் பார்த்து வரும் நிலையில், 10 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ராமாயணா
பாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோவான ரன்பீர் கபூர் ராமராக நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ராமாயணா முதல் பாகம். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி சீதையாகவும், நடிகர் யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

10 நாட்கள் வசூல் விவரம்
ராமாயணா திரைப்படம் முதல் நாளிலிருந்து எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்ற விவரத்தை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ரூ. 2000 கோடி என்கிற இமாலய இலக்கை இப்படம் எட்டுமா என்பது ரசிகர்களின் கனவாக இருக்கிறது. இந்த நிலையில், 10 நாட்களில் ராமாயணா முதல் பாகம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 1210+ கோடி வசூல் செய்துள்ளது.

பொறுப்பு துறப்பு: ராமாயணா முதல் பாகத்தின் 10 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரபூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.