பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா 5 நாட்கள் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்

Report

Ramayana worldwide 5 days Box office: ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த ராமாயணா திரைப்படம் 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

நடிகர் பவன் கல்யாண் மூன்றாவது மனைவியுடன் விவாகரத்து! 13 வருடங்களுக்கு பின் எடுத்த முடிவு

நடிகர் பவன் கல்யாண் மூன்றாவது மனைவியுடன் விவாகரத்து! 13 வருடங்களுக்கு பின் எடுத்த முடிவு

ராமாயணா

'தங்கல்' என்ற இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை கொடுத்த நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் ராமாயணா. இப்படம் உலகம் முழுவதும் கடந்த வாரம் வியாழன் அன்று ரிலீஸானது, ஆரம்பத்தில் கொஞ்சம் டல் ஆக இருந்த இந்த படம் தீபாவளியன்று சூடுபிடிக்க ஆரம்பித்து பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா 5 நாட்கள் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் | Ramayana Worldwide 5 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்

அதிலும் வெளிநாடுகளில் இப்படம் ரூ.200 கோடி வசூலை தற்போது தாண்டி இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது, நேற்று இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்து இந்திய சினிமாவில் பல மைல்கல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது; தற்போது இந்த படம் ரிலீஸாகி 5 நாட்கள் முடிவடைந்த நிலையில் ரூ.630+ கோடிகள் வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா 5 நாட்கள் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் | Ramayana Worldwide 5 Days Box Office

ரூ. 1000 கோடி வசூல் சாதனை

கண்டிப்பாக இந்த ராமாயணா இந்த வார இறுதிக்குள் ரூ. 1000 கோடி வசூலை எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்திலும் இப்படத்திற்கான திரையரங்கு எண்ணிக்கைகள் இன்றிலிருந்து அதிகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக ராமாயணா தமிழகத்திலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் பேசப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா 5 நாட்கள் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் | Ramayana Worldwide 5 Days Box Office

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படத்தின் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல. இவை நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வசூல் விவரங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US