பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
Ramayana worldwide 9 days Box office: ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ராமாயணா திரைப்படம் வெளியாகி 9 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ராமாயணா
ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ராமாயணா. இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் இணைந்து நடித்துள்ளனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ராமாயணா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் உலகளவில் முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
வசூல் விவரம்
இந்த நிலையில், 9 நாட்களில் உலகளவில் ராமாயணா எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 9 நாட்களில் ரூ. 1,110 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 2,000 கோடி என்கிற இமாலய இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்திய கிராமம்: ஏமாற்றத்தை அளித்துள்ள தகவல் News Lankasri