மிகவும் கஷ்டமாக இருந்தது.. ரஜினிகாந்த் பற்றி வெளிப்படையாக பேசிய நடிகை ரம்பா
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் 90-ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.
சுந்தர். சி இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் நடித்தார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அருணாச்சலம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக ரம்பா நடித்திருப்பார்.
அதை தொடர்ந்து, ரம்பா நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். பிறகு, திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
அருணாச்சலம்
இந்த நிலையில், ஒரு பேட்டியில் அவர் அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்த் தனது முதுகில் தட்டினார் என அந்த படத்தில் அவருடன் நடித்த சுவாரஸ்யமான அனுபவத்தை பற்றி பகிர்ந்தார்.
அதற்கு நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர். தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரம்பா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், இதே விஷயத்தை நான் அருணாச்சலம் படம் முடிந்த பிறகு ஒரு பேட்டியில் கூறி உள்ளேன்.
ஆனால் அப்போது ஜாலியாக அனைவரும் எடுத்து கொண்டனர். இப்போது இருக்கும் நெட்டிசன்கள் அனைவரும் மிகவும் தவறாக அனைத்தையும் எடுத்து கொள்கிறார்கள். அது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்று கூறினார்.
மேலும், இது போன்ற விஷயங்களை நடிகர் ரஜினிகாந்த் பெரிதும் கண்டுகொள்ள மாட்டார் என்றும் என்னை பற்றி ரஜினிகாந்திற்கு நன்றாக தெரியும் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
