விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி தான் .. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்பா!
தளபதி விஜய் :
தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நபர் நடிகர் விஜய். இவர் ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் படம் கோட் அதாவது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்துக்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தில் சினேகா,லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அரசியல் பயணம் :
இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும். அவர் இப்பொழுது ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு பின்னர் முழுவதுமாக அரசியலில் கவனம் செலுத்தப்போகிறாராம்.
கோட் திரைப்படம் அவருடைய 68வது படம் ஆகும். முன்பே ஒரு படத்தில் ஒப்புக்கொண்டதனால். அதன் அடிப்படையில் 69வது படம் முடித்துவிட்டு சினிமாவை விட்டு முழுவதுமாக விலகப்போகிறாராம்.

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'LIK' படத்தின் First லுக் போஸ்டர்.. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவிருந்தாரா
ரம்பாவின் விளக்கம்:
இந்த நேரத்தில் தான் நடிகை ரம்பா மற்றும் அவர் குடும்பம் நடிகர் விஜய்யை சந்தித்து பேசி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ரம்பா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் ஊடகங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது விஜய் நடிக்கும் கடைசி படத்தில் ரம்பா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக ரம்பா ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் எனது மகன்கள் நடிகர் விஜய்யின் ரசிகர்கள்.
அவரை பார்க்க வேண்டும் என்று கூறியதால் அவரின் மேனேஜருக்கு தொடர்பு கொண்டு கேட்டேன், அவர் அதற்கு சம்மதித்து உடனே என் மகன்களை பார்க்க ஒப்புக்கொண்டார். அதனால் தான் அவரை சந்தித்து பேசினும்.
மேலும் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கு, அதை கேட்கும்போது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார். ஒரு நடிகையாக எனக்கு நடிப்பதில் கிடைக்கும் சந்தோஷம் மற்றவற்றில் கிடைக்காது, எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இனி அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் தெரிவித்தார்.

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu
