நடிகை ரம்பாவின் சகோதரரா இவர்? அவரும் பிரபல தயாரிப்பாளரா
ரம்பா
நடிகை ரம்பா 90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். அவர் 2010ல் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலான பிறகு நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.
தற்போது ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவரது கணவர் கனடா மற்றும் சென்னையில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். ரம்பா குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.
ரம்பாவின் சகோதரர்
ரம்பாவுக்கு வாசு என்கிற சகோதரர் இருக்கிறார். ரம்பா 2003ல் சகோதரர் வாசு உடன் சேர்ந்து த்ரீ ரோசஸ் என்கிற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால் ரம்பா மிகப்பெரிய கடனாளி ஆனார். அதை சொத்துக்களை விற்று தான் ரம்பா அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரம்பாவின் குடும்பத்தை பார்க்க சகோதரர் வாசு அவரது வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் குழந்தைகள் உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ரம்பா வெளியிட்டு இருக்கிறார்.
புகைப்படங்கள் இதோ..