தனது மகளின் 13வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ரம்பா... போட்டோஸ் இதோ
நடிகை ரம்பா
90களில் தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா.
தனது 15 வயதில் நடிகர் வினீத் ஜோடியாக சர்கம் என்ற மலையாள படம் மூலம் நடிக்க தொடங்கினார். 1992ம் ஆண்டு இப்படம் வெளியாக அதே ஆண்டே வினீத்துடன் இணைந்து மீண்டும் சம்பகுளம் தச்சன் என்ற படத்திலும் நடித்தார்.

1993ம் ஆண்டே தெலுங்கில் ஆ ஒக்கடு அடக்கு என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார்.
பின் தமிழில் உழவன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து மக்களின் கவனம் பெற்றார்.
படங்களில் நடித்து வந்தவர் இடையில் திருமணம் செய்து சினிமா பக்கம் வராமலே இருந்தார். பின் சின்னத்திரை பக்கம் வந்தவர் மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1, கிங் ஆஃப் ஜுனியர் போன்ற நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார்.

கொண்டாட்டம்
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ரம்பா இப்போது கொண்டாட்டமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதாவது அவரது மூத்த மகளின் 13வது பிறந்தநாளை கேக் வெட்டி கோலாகலமாக குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் ஷேர் செய்ய ரசிகர்கள் ரம்பா மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.