நான் சினிமாவிற்கு வந்த காரணமே அதுதான்... முதன்முறையாக ஓபனாக கூறிய ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்
சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்கும் நடிகைகளில் ஒருவர் தான் ரம்யா கிருஷ்ணன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். படையப்பாவில் நீலாம்பரி, பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி, அம்மன் படங்கள் எல்லாம் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத படங்களாக உள்ளது.

55 வயதானாலும் இப்போதும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் படங்கள் கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார்.
சினிமா
சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அதில் தான் சினிமாவிற்கு வந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
படிப்பு மற்றும் தேர்வு பயம் காரணமாக தான் சினிமாவுக்கு வந்தேன். படங்களில் நடிக்க தொடங்கிய போது தொடர் தோல்விகளை சந்தித்ததால் பெற்றோர்கள் மீண்டும் படிக்கச் சொன்னார்கள், ஆனால் நான் படிக்க மாட்டேன் என வாக்குவாதம் செய்தேன்.

பின் சினிமாவில் முதல் பெரிய வெற்றியை காணவே அவருக்கு 7 ஆண்டுகள் ஆனதாம்.