தனது கணவரை விவாகரத்து செய்கிறாரா ரம்யா கிருஷ்ணன்.. இருவரும் பிரிந்து இருக்க காரணம் என்ன, வம்சி விளக்கம்
ரம்யா கிருஷ்ணன்
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத்திரம் என தனது திரைப்பயணத்தை ஒரே மாதிரி இல்லாமல் பயணித்தவர். தமிழ் மட்டும் கிடையாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஏராளமான மொழிகளிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தாலும் ரம்யா கிருஷ்ணன் பிரபலம் ஆனது படையப்பாவில் வந்த நீலாம்பரி கதாபாத்திரத்தின் மூலம் தான்.
இப்போது எல்லோர் மனதிலும் ராஜமாதாவாக நிலைத்து உள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
விவாகரத்து
ரம்யா கிருஷ்ணன், இயக்குனர் வம்சியை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அண்மையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது கணவர் வம்சியை விவாகரத்து செய்கிறார் என தகவல் வைரலாக பரவியது.
இதுகுறித்து இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில், படப்பிடிப்புகளுக்காக தான் ஹைதராபாத்தில் நான் இருக்கிறேன், ரம்யா கிருஷ்ணன் சென்னையில் உள்ளார். நாங்கள் தனித்தனியாக இருப்பதால்தான் இந்த வதந்திகள் உருவாகியிருக்கலாம்.
இப்படி வதந்திகளைப் பரப்புவது சாடிசம் என்றும் இவற்றை பார்க்கும் போது சிரிப்பு வருவதாகவும், இதில் துளியும் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
