23 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கப்போகும் நடிகை- யாரு தெரியுமா?
இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கமல், சூர்யா என பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டது.
ரஜினியின் படம் மட்டுமே எதுவும் இதுவரை வெளியாகவில்லை, கடைசியாக ரஜினி அண்ணாத்த திரைப்படம் நடித்திருந்தார், படம் அமோக வெற்றி என கூற முடியாது, வெற்றி என கூறலாம்.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பார்த்தால் இளம் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறார்கள்.
தற்போது படம் குறித்து என்ன ஸ்பெஷல் தகவல் என்றால் 23 வருடங்கள் கழித்து ரஜினியுடன் நடிக்க இப்புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
கடைசியாக இவர் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினியை அடுத்து கமல்ஹாசன் விக்ரம் படம் மட்டுமே செய்த சாதனை- விஜய், அஜித் படங்கள் கூட இல்லை
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri