நடிகை ரம்யா கிருஷ்ணன் அம்மாவை துப்பாக்கியால் சுட்ட ரஜினி பட இயக்குனர்.. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை
தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்மின்றி இன்று இவருடைய பிறந்தநாள் ஆகும்.
துப்பாக்கியால் சுட்ட இயக்குனர்
இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாயார் மாயாவை பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் சில தினங்களாக வைரலாகி வருகிறது.
நடிகர் நாகேஷ் இயக்கத்தில் 1985ஆம் ஆண்டு உருவான திரைப்படம் 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. இப்படத்தில் ஆனந்த் பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இந்த படத்தின் ஒத்திகை நாகேஷின் வீட்டில் நடந்து வந்தது. அப்போது நாகேஷின் இளைய மகனுடன் கே. எஸ். ரவிக்குமார் பொம்மை துப்பாக்கி ஒன்றில் ஈயத்தால் செய்த புல்லட்டை கொண்டு குறிவைத்து சுட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை
அப்போது ரம்யா கிருஷ்ணனின் தாயார் தனது கையை சரியாக குறி வைத்து சுடும்படி கூறியுள்ளார். கே.எஸ். ரவிக்குமாரும் அதை செய்து துப்பாக்கியால் சுட்டுருக்கிறார். ஆனால், குறி தவறி ரம்யா கிருஷ்ணனின் தாயார் தோள்பட்டையில் சுட்டுவிட்டது.
இதை பார்த்த பதறிப்போன நடிகர் ஆனந்த் பாபு உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வைத்துள்ளார். ஆழமாக பாய்ந்த அந்த புல்லட்டை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளார்கள். இதன்பின் அவர் நலமாகியுள்ளார். இந்த சம்பவம் தான் தற்போது மீடியா மத்தியில் தீடீரென வைரலாகி வருகிறது.

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணனை வைத்து படையப்பா எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri