ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு மற்றும் அவர் வாங்கும் சம்பளம்.. முழு விவரம் இதோ
ரம்யா கிருஷ்ணன்
இந்திய அளவில் பிரபலமான மூத்த நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். 1984ஆம் ஆண்டு சினிமாவில் இவர் நடிக்க துவங்கினார். 40 ஆண்டுகளை கடந்தும் திரையுலகில் பயணித்து வருகிறார்.
படையப்பா, பாகுபலி, அம்மன் ஆகிய படங்களில் என மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் ஜெயிலர் படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தில் மூன்றாவது முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
இன்று ரம்யா கிருஷ்ணனின் பிறந்தநாள். தனது 55வது பிறந்தநாளை கொண்டாடும் ரம்யா கிருஷ்ணனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 40 ஆண்டுகளாகியும் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள ரம்யா கிருஷ்ணன் ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.