அவர் என்னை சைட் அடித்தார்.. முகத்திற்கு நேராக சொன்ன நடிகை ரம்யா கிருஷ்ணன்!
ரம்யா கிருஷ்ணன்
இந்திய அளவில் பிரபலமான மூத்த நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். 1984ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் 40 ஆண்டுகளை கடந்தும் திரையுலகில் பயணித்து வருகிறார்.
அந்த வகையில், படையப்பா, பாகுபலி, அம்மன் ஆகிய படங்களில் என மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் ஜெயிலர் படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தில் மூன்றாவது முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சைட் அடித்தார்!
இந்நிலையில், ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் 'ஜெயம்மு நிச்சயம்முரா' நிகழ்ச்சிக்கு ரம்யா கிருஷ்ணன் விருந்தினராக வந்தார்.
அப்போது அவரிடம் சிறுவயதிலிருந்தே உன்னை பலர் சைட் அடித்திருப்பார்கள் என ஜெகபதி கூற, அதற்கு நீங்களும் ஒருவர்' என ரம்யா கிருஷ்ணன் முகத்திற்கு நேராக பதிலடி கொடுத்துள்ளார்.