நடிகை ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பார்த்து செருப்பை வீசிய பிரபல நடிகரின் ரசிகர்கள்

Ramya Krishnan Padaiyappa
By Jeeva Nov 15, 2021 07:10 AM GMT
Report

1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அந்த காலக்கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தார் என்றே சொல்லலாம்.

முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவர் பின்னாளில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்து இன்று வரை படங்களில் தன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார்.

1999-ல் படையப்பா படத்தில் ரஜினிகாந்த்துடன் ரம்யா கிருஷ்ணன் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்ததின் விளைவாக ஏற்பட்ட ஒரு நிஜ சம்பவம் குறித்து அவர் பேசியிருப்பது தான் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இன்றும் நீலாம்பரி கதாபாத்திரம் அனைவராலும் ரசிச்சு பேசப்படும் கதாபாத்திரமாக இருந்து வருகிறது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலை அப்போது படம் ரிலீஸ் ஆனபோது இல்லை என்பதே உண்மை.

1999-ல் படம் முதன் முதலில் திரையரங்குகளில் வெளியானபோது நீலாம்பரி என்னும் கதாபாத்திரத்தை பார்த்து திரையின் மீது செருப்பை வீசி ஆவேசத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். அதற்கு பின்னரே ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை வியந்து பாராட்ட தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.

  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US