ராஜமாதாவின் ரியல் மகனை பார்த்துள்ளீர்களா! ரம்யா கிருஷ்ணனின் மகன் தற்போது எப்படி உள்ளார் பாருங்க..
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கலக்கி வருவது மட்டுமின்றி, சின்னத்திரையிலும் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.
தமிழ் சினிமாவிற்கு வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் கடந்த 1983 ஆம் ஆண்டு அறிமுகமான ரம்யா கிருஷ்ணன், பின் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அங்கு மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.
இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழில் படையப்பா, பஞ்சதந்திரம், பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் வம்சி என்பவரை ரம்யா கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 17 வயதாகும் ரித்விக் என்ற மகன் உள்ளார்.
மேலும் ரம்யா கிருஷ்ணன் அவரின் சமூக வலைத்தளத்தில் அவர் மகனின் ரீ-சென்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அவர் மகனின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..