நடிகை ரம்யா கிருஷ்ணனா இது.. இளம் வயதில் நடத்திய கிளாமர் போட்டோஷூட், தற்போது படுவைரல்
ரம்யா கிருஷ்ணன்
இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழில் 1983ல் வெளிவந்த வெள்ளை மனசு படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார். குறிப்பாக அம்மன் கதாபாத்திரங்களில் இவர் நடித்தால் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.
80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக கலக்கி வந்த ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பா படம் தனி அடையாளத்தை உருவாக்கியது. கிளாமர் நாயகியாக மட்டுமின்றி வில்லியாகவும் தன்னால் நடித்து அனைவரையும் அசரவைக்க முடியும் என நிரூபித்தார்.
படையப்பா படத்திற்கு பின் அனைவரையும் மிரள வைத்த கதாபாத்திரம் என்றால் அது, பாகுபாலி படத்தில் வரும் ராஜமாதா சிவகாமி தேவி ரோல் தான். 54 வயதை கடந்தும் சினிமாவில் பிசியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தற்போது ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வின்டேஜ் கிளாமர் போட்டோஷூட்
இளம் வயதில் ரசிகர்களை கனவு கன்னியாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இந்த நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் இளம் வயதில் வின்டேஜ் லுக்கில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் தற்போது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

