தீடீரென உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய தொகுப்பாளினி ரம்யா.. ஷாக்கான ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் ரம்யா சுப்பிரமணியம்.
தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் அவ்வப்போது திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அப்படி சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் ஓகே கண்மணி, கேம் ஓவர், ஆடை, விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வந்தார்.
இந்த கடினமான உடற்பயிற்சியின் மூலம் தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார் ரம்யா. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், உங்களுக்கு என்னவானது ரம்யா, இப்படி ஆகிட்டீங்க என்று கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


