மீண்டும் கிளாமர் ரூட்டிற்கு மாறிய நடிகை ரம்யா பாண்டியன்... லேட்டஸ்ட் போட்டோ ஷுட் வைரல்
ரம்யா பாண்டியன்
டம்மி டப்பாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன்.
முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்தார், அதன்பின் அவர் நடித்த ஜோக்கர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இவருக்கு வரவேற்பை கொடுத்தது.

அதன்பின் ரம்யா பாண்டியனை கொண்டாடும் அளவிற்கு ஹிட் படங்கள் வரவில்லை, இதனால் தனது ரூட்டை மாற்றி போட்டோ ஷுட்களில் களமிறங்கியவர் மொட்டை மாடியில் புடவையில் ஒரே ஒரு போட்டோ ஷுட் நடத்தி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
விஜய் டிவி பக்கம் வந்தவர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

திருமணம்
இதையடுத்து யோகா பயிற்சி எடுக்க ரிஷிகேஷ் சென்றபோது அங்கு யோகா பயிற்சியாளராக இருந்த லவல் தவானை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு போட்டோ ஷுட்கள், குடும்ப விழாக்கள் என பிஸியாக இருந்த ரம்யா பாண்டியன் மீண்டும் தனது பழைய ரூட்டிற்கு வந்துள்ளார்.

அதாவது அவர் கிளாமராக உடை அணிந்து அதற்கு ஏற்ப லைட்ஸ் அமைத்து ரசிகர்களை கவரும் வண்ணம் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளது. அந்த வீடியோ தான் ரசிகர்களிடம் படு வைரலாகி பரவி வருகிறது. இதோ பாருங்கள்,