வெளிவந்தது ரம்யா பாண்டியனின் ஹல்தி நிகழ்ச்சி வீடியோ.. யாரெல்லாம் வந்துள்ளனர் பாருங்க
ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் ஒரே ஒரு போட்டோ ஷுட் நடத்தி முன்னணி நாயகிகளுக்கு இணையாக பிரபலம் ஆனவர் ரம்யா பாண்டியன்.
அந்த போட்டோ ஷுட் கொடுத்த வரவேற்பு விஜய் டிவி பக்கம் வந்து குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின் தமிழை தாண்டி மலையாள படங்களிலும் கமிட்டாகி நடித்தார்.
இவருக்கு கடந்த நவம்பர் 8ம் தேதி லோவல் தவான் என்பவருடன் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் மேடை அமைக்கப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.
ஹல்தி வீடியோ
இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்கு முன் நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை ரம்யா பாண்டியன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
