ரம்யா பாண்டியன் காதல் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? முழு விவரம் இதோ
நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தாலும், அவரை பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது அவரது மொட்டைமாடி போட்டோஷூட் தான்.
குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு இருக்கிறார் அவர்.
அவ்வப்போது ரம்யா பாண்டியன் அதிகம் கவர்ச்சி காட்டி வெளியிடும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.
திருமணம்
இந்நிலையில் ரம்யா பாண்டியன் விரைவில் காதல் திருமணம் செய்ய இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அவரது காதலர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவரது பெயர் லவெல் தவான். யோகா மாஸ்ட்டராக அவர் பணியாற்றி வருகிறாராம். யோகா க்ளாஸ் செல்லும் போது தான் அவர்கள் நடுவில் காதல் மலர்ந்து இருக்கிறது.
அடுத்த மாதம் ரிஷிகேஷில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு பெரிய திருமண வரவேற்பும் நடைபெற இருக்கிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
