சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஜோடியாகும் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்! வெளியான புதிய தகவல்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகி விடுவார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன் தற்போது முக்கிய நடிகரின் படத்தில் கமிட்டாகியுள்ளார்.
அதன்படி ரம்யா பாண்டியன் அடுத்து மாமூட்டி நடிக்கும் படத்தில் அவருடன் நடிக்கவுள்ளார். அப்படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.