எனக்கு குழந்தை இல்லை, ஆனால்.. VJ ரம்யா சுப்ரமணியன் சொன்ன விஷயம்

By Parthiban A Oct 03, 2026 12:30 PM GMT
Report

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளிணி விஜே ரம்யா சுப்பிரமணியன். அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள். டிவி நிகழ்ச்சிகளை விட தற்போது விருது விழாக்கள், பட விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தான் ரம்யா அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார்.

2014 இல் அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதற்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டார். அதற்கு பிறகு தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார் அவர்.

எனக்கு குழந்தை இல்லை, ஆனால்.. VJ ரம்யா சுப்ரமணியன் சொன்ன விஷயம் | Ramya Subramanian About Living Childless

குழந்தை இல்லை, ஆனால்..

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் குழந்தை இல்லாமல் தனியாக இருப்பது பற்றி பேசி இருக்கிறார்.

"எனக்கு தற்போது குழந்தை இல்லை. எனக்கு 20 வயதிருக்கும்போது ஒரு கனவு இருந்தது. 23 வயதில் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும், மகிழ்ச்சியான ஹவுஸ் ஒய்ஃபாக வாழ வேண்டும் என்பதுதான் அந்த கனவு.

ஆனால் தற்போது நான் இருக்கும் நிலை என்னுடைய சாய்ஸ். குழந்தை இல்லாமல் இருப்பது ஒரு இழப்பாக நான் பார்க்கவில்லை. ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை பெற முடியும். தற்போது நான் இண்டிபெண்டன்ட் ஆக இருக்கிறேன். எனக்கு ஒரு குழந்தை இருந்தால் அந்த குழந்தையை ஸ்கூல் அனுப்ப வேண்டும், அந்த குழந்தையின் வெற்றியை பார்த்தால் நம்முடைய வெற்றியை விட பெரிய மகிழ்ச்சியை அது கொடுக்கும்.

'அம்மா, அம்மா' என நம்மை சுற்றி வரும் ஒரு குழந்தை இருக்கும். அதை எல்லாம் நான் இழந்து இருக்கிறேன்.

ஆனால் அதற்கு பதிலாக எனக்கு சுதந்திரம் இப்போது இருக்கிறது, சந்தோஷம் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வெளியில் செல்ல முடியும். நினைத்தால் உடனே ஒரு வேலை செய்யலாம். நினைத்த உடனே ஒரு செல்ல முடியும். இது எல்லாம் கிடைத்து இருக்கிறது" என ரம்யா தெரிவித்திருக்கிறார். 

எனக்கு குழந்தை இல்லை, ஆனால்.. VJ ரம்யா சுப்ரமணியன் சொன்ன விஷயம் | Ramya Subramanian About Living Childless

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US