பாகுபலி நடிகருக்கு சூர்யா கொடுத்த அட்வைஸ் ! மேடையில் அவர் சொன்ன விஷயம்..
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படக்குழு தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று எதற்கும் துணிந்தவன் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் ஹைதெராபாத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் சூர்யா முதற்கொண்டு பலரும் கலந்து கொண்டனர். மேலும் அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் ராணாவும் கலந்து கொண்டார்.
மேடையில் பேசிய ராணா சூர்யா உடனான சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது " 10 வருடங்களுக்கு முன் என் படத்தை சூர்யா எடிட்டிங் அறையில் பார்க்க நேர்ந்தது
. பின்னர் என்னை அவரின் காரில் ஏற்றிக்கொண்டு ஐதராபாத் முழுக்க தொடர்ந்து நான்கு மணிநேரம் சுற்றி திரிந்தார். நீ செய்வது நடிப்பு இல்லை, வெறும் பாசாங்கு தான்" என சொன்னார்.
பாகுபலி, பீம்லா நாயக் உள்ளிட்ட உள்ளிட்ட படங்களில் எனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவியதே சூர்யா எடுத்த அந்த 4 மணிநேரம் கிளாஸ் தான்" என பேசியுள்ளார்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan