பராசக்தி படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் தெலுங்கு டாப் ஹீரோ? யார் தெரியுமா
பராசக்தி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி. இப்படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்து வருகிறார்.
மேலும் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பேசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராணா டகுபதி
இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறதாம்.
அங்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஸ்ரீலீலா மற்றும் ராணா ஆகிய இருவரும் செல்வதை ரசிகர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் நடிகர் ராணா இப்படத்தில் நடிக்கிறார் என உறுதியாக கூறப்பட்டு வருகிறது.