ஹீரோவாக அறிமுகமாகும் பாகுபலி நடிகரின் தம்பி - யாருடைய இயக்கத்தில் தெரியுமா
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் ராணா டகுபதி. இவருக்கு அபிராம் டகுபதி என்கிற சகோதரரும் உள்ளார்.
நடிகர் ராணாவின் சகோதரர் அபிராம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறாராம்.
ஆம் இப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ளாராம். மேலும் அபிராம் டகுபதியின் தந்தை சுரேஷ் பாபு, இப்படத்தை தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தனது படம் பற்றியும் அறிமுக நாயகன் அபிராம் பேசியுள்ளார்.
இதில் " என்னையும் நடிகனாக்கி பார்க்கவேண்டும் என்பது என் தாத்தாவின் ஆசை. அவர் உயிரோடு இருந்திருந்தால் அது முன் கூட்டியே நடந்திருக்கும். தற்போது எனது தந்தையின் ஆதரவுடன் நான் ஹீரோவாக அறிமுகமாகிறேன் " என கூறியுள்ளார்.