ஹிந்தி நடிகையிடம் மன்னிப்பு கேட்ட பாகுபலி வில்லன்! மேடையில் அப்படி பேசியதால் சர்ச்சை

By Parthiban.A Aug 15, 2023 01:30 PM GMT
Report

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தவர் ராணா டகுபதி. அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள் என்றும் சொல்லலாம். ஆனால் அதற்கு பிறகு ராணா நடித்த படங்கள் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா படத்தின் விழா நடைபெற்றது. அதில் ராணாவும் கலந்து கொண்டார். மேடையில் பேசிய ராணா கூறிய ஒரு விஷயம் சர்ச்சை ஆனதால் தான் தற்போது அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

சோனம் கபூர்

 மேடையில் பேசிய ராணா, 'துல்கர் சல்மான் ரொம்ப பொறுமையானவர். நடிப்பு பள்ளியில் படிக்கும்போது அவர் எனக்கு ஜூனியர். அப்போதிருந்தே தெரியும். அவர் நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங்கை பார்க்க சென்று இருந்தேன். என் வீட்டின் அருகில் நடந்த ஷூட்டிங் என்பதாலும், தயாரிப்பாளர் என் நண்பர் என்பதாலும் சென்றேன்.

'அந்த ஷூட்டிங்கில் ஒரு பிரபல ஹிந்தி நடிகை நடிக்க வந்திருந்தார். அவர் மொத்த குழுவினரையும் காக்க வைத்துவிட்டு அவரது கணவர் உடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். எதாவது முக்கிய விஷயம் என்றாலும் பரவாயில்லை, ஆனால் அவர் ஷாப்பிங் பற்றி பேசிக்கொண்டிருந்தார். துல்கர் சல்மான் பொறுமையாக காத்திருந்தார்.'

ஹிந்தி நடிகையிடம் மன்னிப்பு கேட்ட பாகுபலி வில்லன்! மேடையில் அப்படி பேசியதால் சர்ச்சை | Rana Daggubati Apologise To Sonam Kapoor

'அந்த நடிகை வந்து நடித்தபோது டயலாக்கை மறந்துவிட்டார், அவரால் சரியாக நடிக்க முடியவில்லை. ஆனால் துல்கர் பல டேக் வந்தாலும் பொறுமையாக முகம் சுளிக்காமல் நடித்தார்' என ராணா கூறி இருக்கிறார்.

மன்னிப்பு

The Zoya Factor படத்தில் துல்கர் உடன் நடித்த சோனம் கபூர் தான் இப்படி செய்திருக்கிறார் என கடுபிடித்த ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் மோசமாக ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர்.

இது பெரிய சர்ச்சை ஆனதால் தற்போது சோனம் கபூரிடம் ராணா மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US