ஒரு பெண் செய்த தவறு.. போன் கீழே விழுந்ததால் போட்டோகிராபரை திட்டிய நடிகர் ராணா
பாகுபலி படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து இந்திய அளவில் பேசப்பட்டவர் ராணா டகுபதி. ஆனால், அந்த படத்திற்கு பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால், உடல் எடை குறைந்து படு ஒல்லியாக மாறினார். அதற்குப் பிறகு அவர் படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராணா பொது இடத்தில் செய்திருக்கும் ஒரு செயல், சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

கேமராமேனைத் திட்டியது ஏன்?
ராணா தனது காரில் ஏறுவதற்காக பார்க்கிங் ஏரியாவிற்குச் சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த ஒரு பெண் எதிர்பாராதவிதமாக அவர் மீது உரசியதால் ராணாவின் போன் கீழே விழுந்துவிடுகிறது.
ஆனால், ராணா அந்தப் பெண்ணை எதுவும் சொல்லாமல், தன்னைத் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்த கேமராமேனை அழைத்து கடுமையான தொனியில் திட்டியிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் ராணாவின் இந்த கோபமான செயலைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். "தவறு செய்தவரை விட்டுவிட்டு, கேமராமேனைத் திட்டுவது முறையல்ல" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri