பாக்ஸ் ஆபிஸ்: ரணபாலி உலகளவில் 11 நாட்களில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 27, 2026 07:10 AM GMT
Report

Ranabaali 11 days Box office: ரணபாலி திரைப்படம் இதுவரை 11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ்: 12 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 12 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்

ரணபாலி

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில திரைப்படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. ஆனால், ரணபாலி படம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாக்ஸ் ஆபிஸ்: ரணபாலி உலகளவில் 11 நாட்களில் செய்துள்ள வசூல் | Ranabaali 11 Days Worldwide Box Office

இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் இது. இப்படத்திற்கு அஜய்-அதுல் இசையமைத்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: ரணபாலி உலகளவில் 11 நாட்களில் செய்துள்ள வசூல் | Ranabaali 11 Days Worldwide Box Office

பாக்ஸ் ஆபிஸ்

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. மேலும், ஜெயிலர் 2 அலையில் இப்படம் சிக்கியதால், எதிர்பார்த்த அளவிற்கு வசூலும் வரவில்லை.

பாக்ஸ் ஆபிஸ்: ரணபாலி உலகளவில் 11 நாட்களில் செய்துள்ள வசூல் | Ranabaali 11 Days Worldwide Box Office

இந்த நிலையில், ரணபாலி திரைப்படம் உலகளவில் 11 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் 11 நாட்களில் ரூ. 70 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US