பாக்ஸ் ஆபிஸ்: ரணபாலி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்
Ranabaali Movie 9 days Collection: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வெளியான ரணபாலி திரைப்படம் 9 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
ரணபாலி
டாக்சி வாலா, ஷ்யாம் சிங்கராய் போன்ற திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரணபாலி. இப்படத்தில் ரியல் ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் வோஸ்லூ வில்லனாக நடித்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் வெளியான மம்மி, மம்மி ரிட்டர்ன்ஸ், பிளட் டைமண்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸ்
ரணபாலி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ள இப்படம், 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகளவில் ரணபாலி திரைப்படம் 9 நாட்களில் ரூ. 70.10 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.