ரணபாலி (தெலுங்கு): திரை விமர்சனம்

Report

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள ரணபாலி தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

ரணபாலி (தெலுங்கு): திரை விமர்சனம் | Ranabaali Movie Review

கதைக்களம்

ஆந்திராவில் சிங்கனமலயின் உச்சில் உள்ள குகையில் பத்ர மல்லனா என்ற சித்தர் ஜீவசமாதியாகிருக்கிறார். 1854யில் அந்த குகைக்கு கர்ப்பிணி பெண்ணாக வரும் ராஜம்மா (ஈஸ்வரி ராவ்) குழந்தையை பெற்றெடுக்கிறார்.

ஆனால் அந்த குழந்தை உடல் அசைவின்றி இருக்கும்போது, குகைக்குள் இருந்து பத்ர மல்லனா சித்தர் வெளியே வருகிறார். குழந்தையை உயிர்ப்பிக்க வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது என்று அவர் கூற, ராஜம்மாவும் அதற்கு சம்மதிக்க அந்த குழந்தை உயிர்பிரித்ததும் ரணபாலி என சித்தர் பெயர்சூட்டுகிறார்.

ரணபாலி (தெலுங்கு): திரை விமர்சனம் | Ranabaali Movie Review

ரணபாலி (விஜய் தேவரகொண்டா) முரட்டுத்தனமான கோபக்கார இளைஞனாக வளர, அவருக்கு ஜெயம்மாவுடன் திருமணம் நடக்கிறது. அதே சமயம் பிரிட்டிஷின் ஆட்சியில் இந்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதியில் மக்கள் அடிமைகளாக இருக்க, மெட்ராஸ் பிரெசிடென்ஸின் கமிஷனராக இருக்கும் தியோடோர் ஹெக்டர் ஆந்திர பிரதேசத்தின் ஊர்களுக்கு பயணிக்கிறார்.

மக்களை அடிமைகளாக வேலைவாங்கி நெல், தானியங்களை மூட்டை மூட்டையாக சேர்க்கும் ஹெக்டர், ஒரு கைப்படி நெல்லும் பிரிட்டிஷிற்கே சொந்தம் எனக் கூறி அராஜகம் செய்கிறார். தானியங்களை மெட்ராஸ் துறைமுகத்திற்கு கொண்டுவர ரயில் பாதையை தயார் செய்ய வேண்டும் என்பதால், பெரும் பஞ்சத்தை ஏற்படுத்துகிறார் ஹெக்டர்.

ரணபாலி (தெலுங்கு): திரை விமர்சனம் | Ranabaali Movie Review

அதனால் பசியால் இடம்பெயரும் மக்களை வேலைக்கு உணவு என்று கூறி அழைத்து வந்து அவர்களை பிரிட்ஷ் ஆட்சியாளர்கள் அடிமைகளாக நடத்துகின்றனர். இந்த சூழலில் தனது ஊரில் செழிப்பாக வாழும் ரணபாலிக்கு, மக்கள் பலர் அடிமைகளாக நடத்தப்படுவது தெரிய வந்து வெகுண்டெழுகிறார்.

தனியாளாக பிரிட்டிஷ் அரசை எதிர்க்க களமிறங்கிய ரணபாலி, ஹெக்டரின் அராஜகத்திற்கு முடிவு கட்டினாரா? மக்கள் பஞ்சத்தில் இருந்து மீண்டார்களா? என்பதே மீதிக்கதை.

Street Flighter திரை விமர்சனம்

Street Flighter திரை விமர்சனம்

படம் பற்றிய அலசல்

டாக்சிவாலா, ஷியாம் சிங்கா ராய் படங்களை இயக்கிய ராகுல் சங்கிரித்யன், 1876-78 காலகட்டத்தில் ஏற்பட்ட மெட்ராஸ் பஞ்சம் என்ற கொடூர நிகழ்வை கதைக்களமாக எடுத்து ரணபாலியாக கொடுத்துள்ளார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் செய்த கொடூரங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். செழிப்பான ஊர்களில் பஞ்சத்தை ஏற்படுத்தி மக்களை அடிமையாக்கும் பிரிட்டிஷ் திட்டத்தை காட்டிய விதம் அருமை.

மனதை ரணமாக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளன. குறிப்பாக, ஒரு கையளவு சோற்றை எடுத்த சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மனதை உலுக்கும். மெட்ராஸ் பஞ்சம் புகைப்படங்களை ஆங்காங்கே காட்டியது படத்தை இன்னும் உண்மைக்கு நெருக்கமாக காட்டுகிறது.

ரணபாலி (தெலுங்கு): திரை விமர்சனம் | Ranabaali Movie Review

அதே சமயம் தண்டவாளத்தை பிடுங்கி அடிப்பது, எந்த வெட்டுகள் குத்துகள் பட்டாலும் ஹீரோ பிழைத்துக் கொள்வது போன்ற ஓவர்டோஸான சில விஷயங்கள் உறுத்தலாக தெரிகின்றன. ரணபாலி கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம்.

எப்போதும் கோப முகத்துடனே இருக்கும் அவர், எமோஷனல் காட்சிகளில் கலக்கும்போது நடிப்பில் மிளிர்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷத்தை காட்டும் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவுடனான காதலிலும் அதே முரட்டுத்தனத்தை காட்டுகிறார்.

கிளைமேக்சில் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை காட்டுவதுபோல் விஜய் தேவரகொண்டா மிரட்டியிருக்கிறார். ரஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் துடுக்கான பெண்ணாக வந்தாலும், மக்களின் துயரத்தை கண்ட பின் அவர்களுக்காக கணவனை பிரிய துணியும் இடத்தில் நடிப்பில் அசத்திவிடுகிறார்.

ரணபாலி (தெலுங்கு): திரை விமர்சனம் | Ranabaali Movie Review

ஹெக்டர் கதாபாத்திரத்தில் மம்மி படப்புகழ் அர்னால்ட் வோஸ்லூ அட்டகாசம் செய்துள்ளார். ஒரு கைப்பிடி நெல்லினை குருவி கூட கொண்டு செல்லக்கூடாது என்று சுடும் காட்சி முதல் கிளைமேக்ஸ்வரை அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

ஈஸ்வரி ராவ் வழக்கம்போல் அசால்ட்டாக ராஜம்மா கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க, ஷீலா ராஜ்குமார் மற்றும் வினோத் சாகர் இருவரும் துணை கதாபாத்திரத்தில் படம் முழுக்க பிரமாதப்படுத்தியுள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது.

1870கள் காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையில் கலையமைப்பு குழு வேலை பார்த்துள்ளது. அஜய் - அதுலின் இசை படத்திற்கு பக்கபலம். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். ஜிஷ்ணுவின் ஒளிப்பதிவு பிரமாதம்.

ஜெயிலர் 2 திரை விமர்சனம்

ஜெயிலர் 2 திரை விமர்சனம்

க்ளாப்ஸ்

  • விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா, அர்னால்ட்
  • திரைக்கதை
  • காட்சியமைப்புகள்
  • சண்டைக்காட்சிகள்

பல்ப்ஸ்

  • ஓவர்டோஸான சில ஹீரோ பில்டப் காட்சிகள்
  • அதீத வன்முறை காட்சிகள்
  • இரண்டாம் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்

மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும், 1877 மெட்ராஸ் பஞ்சத்தை கண்முன் காட்டியதற்காகவே இந்த ரணபாலியை ரசிக்கலாம்.

ரணபாலி (தெலுங்கு): திரை விமர்சனம் | Ranabaali Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US