ஓடிடியில் ரணபாலி.. எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ
Ranabaali OTT release: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ரணபாலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ரணபாலி
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ராகுல் சங்கிரித்யன். டாக்சி வாலா, ஷ்யாம் சிங்க ராய் போன்ற திரைப்படங்களை இயக்கிய இவர், தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ரணபாலி.

1878-ஆம் ஆண்டு காலக்கட்ட பின்னணியில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரியல் ஜோடி விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ரணபாலி திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், ஜெயிலர் 2 திரைப்படத்தின் அதிரடியான ஓட்டத்தால் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை.
ஓடிடி
இந்த நிலையில், ரணபாலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 13-ஆம் தேதி ரணபாலி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri