வீட்டை வாடகைக்கு விட்டு கோடிகளில் சம்பாதிக்கும் ரன்பீர் கபூர்.. மாத வாடகை எவ்வளவு பாருங்க
நடிகர் ரன்பீர் கபூர் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர். அவரது அனிமல் படம் 900 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து ரன்பீர் ராமாயணம் படத்தில் ராமர் ஆக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அந்த படத்தின் டீசரும் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. அந்த படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

வீடு வாடகை
ரன்பீர் கபூர் முன்பு வசித்து வந்த பாலி ஹில்ஸ் வாஸ்து அபார்ட்மெண்டில் இருக்கும் தனது வீட்டை தற்போது வாடகைக்கு விட்டு இருக்கிறார்.
2016ல் அவர் அந்த வீட்டை 35 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தார். தற்போது அதை மாத வாடகை 11 லட்சம் ரூபாய்க்கு மொத்தம் 5 வருட லீஸுக்கு விட்டுள்ளார். இதன் மூலமாக வருடம் 1.32 கோடி ரூபாய் அவர் சம்பாதிக்கிறார்.
ரன்பீர் - ஆலியா ஜோடி தற்போது 250 கோடி செலவில் கட்டி இருக்கும் புது வீட்டுக்கு குடிபோயிருப்பது குறிப்பிடத்தக்கது.