செல்பி எடுக்க வந்த ரசிகர்.. போனை தூக்கி போட்டு உடைந்த ரன்பீர்! அதிர்ச்சி வீடியோ
செல்பி
பொதுவாக நடிகர்கள் பொது இடங்களுக்கு வருகிறார்கள் என்றாலே எப்போதும் ஒரு பெரிய கூட்டம் கூடிவிடும். அதுவும் நடிகர் நடிகைகள் உடன் செல்பி எடுத்துக்கொள்ள தான் அதிகம் பேர் முந்துவார்கள்.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் அவரது மனைவி ஆலியா பட் மற்றும் குழந்தை உடன் அடிக்கடி வெளியில் வரும்போது எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன. இருப்பினும் குழந்தையின் போட்டோவை வெளியிட வேண்டாம் என பத்ரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களை ரன்பீர் கேட்டுக்கொண்டார். அதனால் அவரது குழந்தை போட்டோ எதுவும் வெளிவரவில்லை.
அதே நேரத்தில் ரன்பீர் உடன் செல்பி எடுக்கவும் அதிகம் பேர் வருகிறார்கள்.

போனை தூக்கி போட்ட ரன்பீர்
இந்நிலையில் தற்போது ரன்பீர் உடன் செல்பி எடுக்க ரசிகர் ஒருவர் பலமுறை முயற்சிக்கிறார். ரசிகரின் செயலை பார்த்து கோபமான ரன்பீர் அவரது போனை வாங்கி தூக்கி எறிந்துவிடுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரன்பீர் செயலுக்கு பலரும் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.
What just happened here!? ?#RanbirKapoor #Viral pic.twitter.com/oHjJdSINfP
— Trendulkar (@Trendulkar) January 27, 2023
சூர்யா ஜோதிகா ஜோடியாக யாரை சந்தித்து இருக்கிறார்கள் பாருங்க! ஒருவேளை இருக்குமோ