பல படங்களில் நடித்துள்ள ரங்கம்மா பாட்டியா இது?- பேருந்து நிலையத்தில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ
தமிழ் சினிமாவில் காமெடிக்கு பெயர் போன நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவரது காமெடிகள் தான் இப்போதும் ரசிகர்களிடம் பேசுகிறது.
எந்த ஒரு மீம்ஸ் என்றாலும் வடிவேலு புகைப்படம் தான் பயன்படும். அப்படி வடிவேலுவுடன் நிறைய படங்களில் காமெடி காட்சிகள் நடித்து பிரபலமானவர் ரங்கம்மா பாட்டி.
இவர் 12 பிள்ளைகளை பெற்றவர், அனைவரும் கைவிட இவர் சென்னையில் பிச்சை எடுத்து வருகிறார் என்ற செய்தி பரவியது.
ஆனால் உண்மையில் அவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி சின்ன சின்ன பொம்மை மற்றும் இதர பொருட்களை விற்று பிழைத்து வருகிறார்.
சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஊர் திரும்பிய போது பஸ் ஸ்டான்டில் படுத்திருக்கிறார்.
அப்போது அவரை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் போட அட இந்த பாட்டி என்ன மிகவும் மோசமாக காணப்படுகிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
