மாதம்பட்டி ரங்கராஜ் மறுமண வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு... ஜாய் கிரிசில்டா போட்ட வைரல் பதிவு
மாதம்பட்டி ரங்கராஜ்
தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
சினிமா படங்களை தாண்டி சமையல் தொழில் மூலம் தான் தமிழக மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.
எந்த ஒரு பெரிய தொழிலதிபர், பிரபலங்கள், அரசியல்வாதி வீட்டு விசேஷமாக இருந்தாலும் இவரது சமையல் தான் இருக்கும். ஆரம்பித்த வேகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட மாதம்பட்டி ரங்கராஜ் இடையில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வழக்கு
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை மறுமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய செய்திகள் தான் அதிகம் வந்தது.

ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு மகளிர் ஆணையத்தில் விசாரணையில் இருந்தது. அந்த விசாரணையின் முடிவை ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படையாகப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில் எனது முன்னாள் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னைக் காதலித்துத் திருமணம் செய்ததையும் இந்தக் குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan