9 பிரபலங்கள் வெளியிட்ட ரங்கோலி படத்தின் பர்ஸ்ட் லுக்
வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் 'ரங்கோலி'. கோபுரம் பிலிம்ஸ் கே.பாபு மற்றும் ஜி.சதிஷ் குமார் ஆகியோர் இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர்.
பள்ளி மாணவர்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை 9 பிரபலங்கள் தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ், அருண் விஜய், வெங்கட் பிரபு, அதர்வா, ஜிவி பிரகாஷ், சதிஷ், வாணி போஜன், நவீன் சந்திரா மற்றும் கார்த்திக் ரத்னம் ஆகியோர் தான் ரங்கோலி பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டு இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பள்ளி மாணவர்கள் பற்றிய படங்கள் மிக மிக குறைவாகவே வருகின்றன. இந்த படத்தில் பெற்றோர் கொடுக்கும் அழுத்தம் காரணமாக ஒரு மாணவன் ஒரு பள்ளியை விட்டுவிட்டு வேறொரு பெரிய பள்ளியில் சென்று சேர்கிறான்.

முற்றிலும் மாறுபட்ட பள்ளியில் அவன் சந்திக்கும் விஷயங்கள் தான் இந்த படத்தின் கதை. மாநகரம், தெய்வ திருமகள் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ் தான் இந்த ரங்கோலி படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
சென்னை மற்றும் கடப்பா ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடத்தி முடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்க, மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.சத்யா நாராயணன் எடிட்டிங் பணிகளை செய்து வருகிறார்.
படம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் ட்ரைலர் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.