தமிழ் சினிமாவில் இது மிகவும் கடினம்.. மனம் திறந்த இயக்குநர் பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்
சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து அவரின் இயக்குநர் அந்தஸ்தை உயர்த்தியது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள 'கிங்ஸ்டன்' படம் வரும் மார்ச் 7ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மனம் திறந்த இயக்குநர்
இதில் கலந்து கொண்டு இயக்குநர் பா.இரஞ்சித் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது மிகவும் கடினம். சவாலான நிலை தொடர்ந்து இருக்கிறது.
இந்த நேரத்தில் இது மாதிரியான கதையை நம்பி படம் எடுத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது பெரிய விஷயம். அதை அடைய நினைக்கும் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! IBC Tamilnadu
