இயக்குனர் அட்லீகாக தவம் கிடக்கும் நடிகர்கள்.. அம்பானி வீட்டு திருமணத்தில் நடந்த சம்பவம்
அட்லீ
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உயர்ந்துள்ளார் இயக்குனர் அட்லீ.
ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் அட்லீயின் ரேஞ் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். ஹாலிவுட்டில் இருந்து கூட வாய்ப்பு வந்துள்ளது என சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ கூறியிருந்தார்.
மேலும் தற்போது அம்பானி வீட்டு திருமணத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் கலந்துகொண்டுள்ளார். அப்போது பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் அட்லீயுடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அட்லீகாக தவம் கிடக்கும் நடிகர்கள்
இந்த வீடியோவில் அட்லீயை கேட்ச் பிடிப்பதற்காக பாலிவுட் நடிகர்கள் அனைவரும் ஸ்லிப்பில் நின்று கொண்டு இருக்கிறோம் என கூறினார். அட்லீ இயக்கத்தில் நடிக்க பாலிவுட் திரையுலகில் அனைத்து நடிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் என இதை பார்க்கும் போது தெரிகிறது.
இதோ அந்த வீடியோ :
.@Atlee_dir , the new star director in Bollywood ??? pic.twitter.com/JkodqbX3tZ
— Rajasekar (@sekartweets) March 3, 2024
ஆனால், இயக்குனர் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜூனுடன் இணையப்போவதாக கூறப்படுகிறது. மறுபக்கம் விஜய்யுடன் நான்காவது முறையாக கைகோர்க்கிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
